சென்னை:-நடிகர் விமல் நடிப்பில், பசங்க, களவாணி,. வாகை சூடவா, மஞ்சப்பை உள்பட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆனபோதும் இப்போதும் கதை விசயத்தில் டைரக்டர்களை எந்த கேள்வியும் கேட்பதில்லை. சொல்லும் கதையை அந்த எதிர்கேள்வியும் இன்றி கேட்பார். பிடித்து விட்டால், உடனே ஓ.கே சொல்லி விடுவார்.
அதையடுத்து, தயாரிப்பாளர் யாரு, கேமராமேன் யாரு என்று சில கேள்விகளை மட்டுமே கேட்பார். அதற்கு டைரக்டர்தரப்பில் இருந்து என்ன சொன்னாலும், படத்தை கரைக்ட்டா முடிச்சிடுவாங்கள்ல அதுபோதும் என்று கேட்பார், அதில் தனக்கு திருப்திகரமான பதில் வந்தால் கால்சீட் கொடுத்து விடுவார். அதனால் இப்போது விமலுக்கு பிறகு சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்து கொண்டிருக்கும் சில ஹீரோக்களிடம் கதை சொலலி ஓ.கே வாங்க முடியாத உதவி இயக்குனர்களெல்லாம், விமல்தான் கெடுபிடி செய்யாத நடிகர் என்று அவரை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். அதனால் தற்போதைய உதவி இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் விமல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி