படத்தை வாங்கி வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய்களை லாபமாகப் பார்த்துள்ளது.இயக்குனர் ராகவனுக்குப் பெரிதாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதை அறிந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி அவரை அழைத்து ஐந்து லட்சம் ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தாராம். ‘மஞ்சப்பை’ படம் ஏறக்குறைய 9 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அப்படியிருக்க இயக்குனருக்கு வெறும் ஐந்து லட்சம் மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் ராகவன் இதை அன்பளிப்பாகக் கருதாமல் அடுத்த படத்திற்கான அட்வான்ஸாகத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி வருகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி