இவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு சமீபத்தில் பல்கேரியா நாட்டுக்கு சென்று பாடல் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருநாள், இரவு நேரத்தில் ரவிதேஜாவின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாராம் ஹன்சிகா. அந்த நேரம் பார்த்து அந்த ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் சென்றதையடுத்து, ஒவ்வொரு அறையாக ரெய்டு நடத்தினார்களாம். அப்போது ரவிதேஜா-ஹன்சிகா இருவரும் ஒரே அறையில் இருப்பதைப்பார்த்து போலீசார் விசாரித்தார்களாம்.
இதையடுத்து படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் ஆகியோர் விரைந்து சென்று அவர்கள் ஒரே படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகை என்பதை போலீசாருக்கு விளக்கி கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றினார்களாம். இந்த சம்பவத்தினால் பெரிய அளவில் அதிர்ச்சியடைந்து போனாராம் ஹன்சிகா. அதோடு, அவரது தாய்குலமோ, இனிமேல் ஹீரோக்களுடன் ஸ்பாட்டில் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஹோட்டலில் அவர்கள் அறைக்கு சென்று பேசுவது கூடாது என்று ஹன்சிகாவுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி