சென்னை:-கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இப்படம் இவருக்கு நல்ல வெற்றியை தந்தாலும் ஒரு நிலையான இடத்திற்காக போராடிக்கொண்டிருந்தார்.இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் ரிலிஸான அரிமாநம்பி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தது மட்டுமின்றி, நல்ல வசூலையும் செய்தது.
அடுத்து இவர் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தை ‘ராடன்’ நிறுவனம் சார்பாக ராதிகா தயாரிக்கிறார். இதில் இவரது ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பணியாற்றயிருக்கின்றனர். இது காதல் கதையம்சம் கொண்ட கதையாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி