இதனையடுத்து, அந்த சிறுமியின் பிரேதத்தை கண்ணீருடன் வீட்டுக்கு எடுத்து வந்த பெற்றோர், இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அருகாமையில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் இறந்த சிறுமியின் ஆன்மா சாந்தியடைய ஜெபக் கூட்டம் நடந்த போது, சவ அடக்கம் செய்யும் ஊழியர் ஒருவர், சவப்பெட்டியின் மூடியை திறந்தார்.அப்போது, அந்த சிறுமியின் தலை லேசாக திரும்பியது. மெதுவாக கண் விழித்து, மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். இந்த அதிசயத்தை கண்டு நெகிழ்ந்துப் போன அவர், உடனடியாக சிறுமியின் தந்தையை அழைத்து இந்த நல்ல சேதியை தெரிவித்தார்.
உடனடியாக, அன்பு மகளை சவப்பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, மார்போடு அணைத்தபடி ஆனந்தக் கண்ணீர் வடித்த தந்தை, அருகாமையில் உள்ள வேறொரு நவீன ஆஸ்பத்திரியில் அவளை அனுமதித்தார்.தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமி, காய்ச்சலின் வீர்யத்தால் ‘கோமாட்டோஸ்’ என்னும் மயக்க நிலைக்கு சென்று விட்டதாகவும், இதை புரிந்துக் கொள்ளாத டாக்டர் அவள் இறந்துப் போய் விட்டதாக தெரிவித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி