மும்பை:-விமல், ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.இதில் ராஜ்கிரண் தாத்தா வேடத்தில் நடித்து இருந்தார். அவரது கேரக்டர் பேசப்பட்டது.மஞ்சப்பை இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ‘ரீமேக்’ ஆகிறது.
இந்தி, கன்னடம், ரீமேக் உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியுள்ளார். தெலுங்கு உரிமையை தாசரி நாரயாணராவ் வாங்கி இருக்கிறார். விரைவில் மூன்று மொழிகளிலும் இப்படத்தை எடுக்கின்றனர். இதற்கான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.
தெலுங்கில் ராஜ்கிரண் நடித்த வேடத்தில் தாசரி நாராயணராவ் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். விமல் வேடத்தில் நடிக்க ஞானி, விஷ்ணு மஞ்சு பரிசீலனையில் உள்ளனர்.இந்தியில் ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி