ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவர்தான் என்று உறுதியாக இருக்கும் ரஜினி ரசிகர்கள் இத்தகைய கணிப்பு தேவைதானா என்கின்றனர். இந்தக் கருத்துக் கணிப்பு இப்போது எதற்காக நடத்தப்பட்டது என்று அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து வேறு சில அதிர்ச்சிகரமான தகவல் இணையதளத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வார இதழ் கருத்துக் கணிப்பு நடத்திய இடங்களில் எல்லாம் ரசிகர்கள் பெரும்பாலும் வாக்களித்தது அஜீத்துக்குத்தானாம். விஜய் பெயரை முன் மொழிந்தவர்கள் குறைவாகவே இருந்தனராம். குறிப்பாக, அஜீத்துக்கும் விஜய்க்கும் ஒரு லட்சத்துக்கும் மேல் ஆதரவு வாக்கு வித்தியாசம் இருந்தததாகவும் கூறப்படுகிறது.ஆனால் அஜீத் தரப்பிடம் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவு குறித்து தெரிவிக்கப் படவில்லையாம். அஜீத்தை எளிதில் தொடர்பு கொள்ளவும் முடியாது. அப்படியே அஜீத்திடம் தெரிவித்திருந்தாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்கிற ஆள் கிடையாது என்பது ஊரறிந்த ரகசியம்.
இந்நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக் கணிப்பின் முடிவாக, விஜய் பெயர் வெளிப்படுத்தப் பட்டது.ஆனால் எதற்காக விஜய் பெயரை அறிவித்தார்கள் என பலரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இந்தச் செய்தியை அந்தக் கருத்துக் கணிப்பு நடத்திய நபர்களில் ஒருவரே வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த வார இதழ் இவ்வாறு செய்திருக்காது என்றே பலரும் பலமாக நம்புகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி