சென்னை:-ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் பஞ்ச் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் டிஸ்கஷன் நடந்தபோதே பக்கம் பக்கமாக ரஜினிக்காக பஞ்ச் வசனங்கள் தயாரிக்கப்பட்டன.
அவற்றிலிருந்து சிறந்த வசனங்களை ரவிகுமார் தேர்வு செய்தார். தற்போது லிங்கா படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. சில முக்கிய காட்சிகளில் பஞ்ச் வசனம் பேசும்படி ரஜினியிடம் கூறினார் ரவிகுமார். ஆனால் அவரோ, எல்லோரும் பஞ்ச் வசனம் பேசுகிறார்கள். நாமும் அதேபோல் பேச வேண்டுமா? என்றார்.
உங்களிடம் ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்று ரவிகுமார் கூறினார். அருகில் இருந்த சந்தானமும் இதையே ரஜினியிடம் வலியுறுத்தினார். ஆனால் அதை ரஜினி ஏற்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து லிங்கா படத்தில் பஞ்ச் வசனம் இடம்பெறுவது சந்தேகமே என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி