செய்திகள்,திரையுலகம் நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…

நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…

நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!… post thumbnail image
சென்னை:-ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள படம் – அமரகாவியம். சத்யாவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் ஆண்டனியை வைத்து நான் என்ற படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார். 1980களில் நடக்கும் காதலை சித்தரிக்கும் காதல் படமாக அமரகாவியம் உருவாகியுள்ளது. இதை குறிக்கும் வகையில் அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டு விழா அழைப்பிதழை 1988 ஆம் ஆண்டு வெளியான பேசும்படம் பத்திரிகையைப் போல் வடிவமைத்துள்ளனர்.

அமரகாவியம் படத்தின் ஆடியோவை பாலா தலைமையில், நடிகை நயன்தாரா வெளியிட, திரிஷா பெற்றுக்கொண்டார். தான் நடித்த படத்தின் விழா மற்றும் புரமோஷனுக்கே வராத நயன்தாரா, அமரகாவியம் இசைவெளியீட்டுக்கு வருகை தந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்த அதற்காக தான் பட்ட கஷ்டத்தை ஆர்யா விவரித்தபோது, இந்தப்படத்தின் ஆடியோ விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் த்ரிஷா, நயன்தாரா இருவரும் வருகிறார்களா என கேட்டனர். “நயன்தாரா த்ரிஷா ரெண்டு பேரையும் இந்த விழாவுக்கு வர வழைக்க, அவர்கள் கை, காலில் விழுந்து கூட்டி வந்தது எனக்கு தான் தெரியும். என் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் என் நன்றி. இந்தப்படம் எல்லோரையும் கவரும் என நம்புகிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி