செய்திகள்,திரையுலகம் தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’!…

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’!…

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’!… post thumbnail image
சென்னை:-விமல்லட்சுமிமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, இன்னமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மஞ்சப்பை’. தாத்தா-பேரனுக்குள்ள நட்பை அழுத்தமாக சொல்லிய இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் பிரபல இயக்குனரான தசாரி நாராயணராவ் இயக்கவிருக்கிறார்.

தமிழில் விமல் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தில் இயக்குனர் தாசரி நாராயணராவே நடிக்கவிருக்கிறாராம். நாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி