செய்திகள்,திரையுலகம் டைட்டானிக் பட நாயகனை விடாமல் துரத்தும் மாடல் அழகி!…

டைட்டானிக் பட நாயகனை விடாமல் துரத்தும் மாடல் அழகி!…

டைட்டானிக் பட நாயகனை விடாமல் துரத்தும் மாடல் அழகி!… post thumbnail image
ஹாலிவுட்:-1997ல் வெளியான ஹாலிவுட் படம் ‘டைட்டானிக்’. உலக அளவில் உள்ள ரசிகர்களை கவர்ந்த அந்த காதல் படத்தில் நாயகனாக நடித்தவர் லியானார்டோ டிகாப்ரியோ. இவர் அந்த ஒரே படத்திலேயே உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகைகளின் இதயங்களை கொள்ளையடித்த நாயகனாகவும் அதன்பிறகு வலம் வந்தார்.

இதனால், அவரது வலையில் அவ்வப்போது இளம்பெண்கள் விழுந்து, அவர் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் சமீபகாலமாக பித்தானியா நாட்டு மாடல் அழகியான கேத்தி கிளாரி. லியானார்டோவுடன் உறவாடி வந்தாராம். பல மாதங்களாக நடந்து வந்த அவர்களின் லீலைகள் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளதாம்.ஆனால், லியானார்டோவைப் பொறுத்தவரை இது வழக்கமான விசயம் என்பதால் அந்த செய்திகளை கண்டுகொள்ளாமல், கேத்தி கிளாரியுடனான உறவை தொடர்ந்து வந்திருக்கிறார்.

ஆனால், கேத்தியின் கணவரோ, லியானார்டோவுடன் தனது மனைவி போதையில் கூத்தடித்த புகைப்படஙகள் மிண்டும் மீண்டும் வெளியானதால், மனசுடைந்து தற்கொலை செய்து கொண்டாராம்.இதனால் முதன்முறையாக தனது செயலுக்காக வருந்திய லியானார்டோ, கேத்தி கிளாரியை சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம். ஆனபோதும், என் கணவர் ஒரு மனநோயாளி. அதனால் அவர் தற்கொலைக்கு நானோ, நீங்களோ காரணமல்ல என்று சொல்லி மீண்டும் லியானார்டோவுடனான உறவை புதுப்பிக்க எண்ணுகிறாராம் கேத்தி கிளாரி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி