சென்னை:-புதுமுக இயக்குனர் ரஜத் தயாரித்து இயக்கி நடிக்கும் படம் இயக்குனர். அவருக்கு ஜோடியாக புவிஷா, சாந்தனா, சோனா, பிராச்சி, மெகுணா, ரிஷா, ஸ்ருதி ஸ்வாசிகா, அஸ்மிதா என 8 புதுமுக ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சங்கர்-கணேஷ் இசை அமைக்கிறார்.
ஏன் இத்தனை ஹீரோயின்கள்? என்றால் கதை அப்படி என்கிறார் ரஜத். அவர் மேலும் கூறியதாவது:-இன்றைக்கு யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு வரலாம் என்கிற நிலை இருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று அலைகிற தாதா ஒருவனுக்கு சினிமா இயக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அவர் படம் எடுப்பதை கேள்விப்பட்டு, அவர் யார் என்று தெரியாமலேயே வாய்ப்பு கேட்டு நடிக்க வருகிறவர்கள்தான் இந்த 8 ஹீரோயின்களும். அவர்கள் என்ன ஆனார்கள். தாதா படம் இயக்கினாரா என்பது கதை. காமெடியும் கவர்ச்சியும் பிப்டி பிப்டி இருக்கும் என்கிறார் ரஜத்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி