லண்டன்:-இங்கிலாந்து பட்டத்து இளவரசர் வில்லியம் சில ஆண்டுகளுக்கு முன்பு கேத்மிடில்டன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இப்போது அவரது தம்பி இளவரசர் ஹாரி திருமணத்துக்கு தயாராக உள்ளார். அவருக்கு ஏராளமான பெண்கள் காதல் வலை விரித்து வருகின்றனர்.
இளவரசர் ஹாரி தென்அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சிலி நாட்டில் அவர் சுற்றுப்பயணம் செய்தபோது பெர்னர்டிகா மிடில்டன் என்ற டி.வி. நிருபர் இளவரசர் ஹாரியிடம் சென்று நான் உங்களை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.உங்கள் அண்ணன் மனைவி பெயரும் மிடில்டன், என்பெயரும் மிடில்டன் தான் எனவே என்னை திருமணம் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். அதற்கு ஹாரி எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி