சிட்னி:-ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஒற்றையர் தரவரிசை பட்டியலில் பதினோறாவது இடத்தில் உள்ள கரோலினா மரீனை சானியா எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சானியாவை சமாளிக்க திணறிய கரோலினா 21-18, 21-11 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.இந்த ஆண்டு துவக்கத்தில் டெல்லியில் நடந்த இந்தியா ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் கோப்பை வென்ற சாய்னா தற்போது மீண்டும் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி