அமெரிக்காவை சேர்ந்த இவர், தேசிய அளவில் மத்திய தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், பல்வேறு சர்வதேச ஓட்டப் பந்தய போட்டிகளிலும் 2012-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்காவின் சார்பில் இவர் பங்கேற்றுள்ளார்.
2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள இவர், அதற்குள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்து, கருவுற்றார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி கலிபோர்னியா நகரில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8 மாத கர்ப்பிணியாக பங்கேற்று ஓடிய இவர் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு இதே தூரத்தை 1:57.34 கடந்தது இவரது தனது அதிவேக சாதனையாக கருதப்படுகிறது. இந்த பந்தயத்தில் 35 வினாடிகள் தாமதமாக 2:32.13 நேரத்தில் லிசியா மோண்ட்டானோ கடந்துள்ளார். 28 வயதாகும் இவர் வெற்றி கோட்டை கடந்ததும் கூடியிருந்த பார்வையாளர்கள் கைதட்டி, கூச்சலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி