புவனேஸ்வர்:- பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒடிசாவில் இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் சேவையை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கொடியசைத்து துவக்கிவைத்தார். பெண்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் முதற்கட்டமாக 200 இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்களை அம்மாநில அரசு துவக்கி உள்ளது. பெண்கள் பயணம் செய்யாத நிலையில் ஆண்களை ஏற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ உரிமையாளர்களின் வருமானமும் பாதிக்கப்படாது. அம்மாநிலத்தில் பெண்களுக்கான பேருந்து சேவை ஏற்கனவே அமலில் உள்ளது. ஆட்டோ பயணத்தை தொடங்கி வைத்துப்பேசிய முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறுகையில், இளஞ்சிவப்பு நிற ஆட்டோ திட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், சுமூக பயணத்திற்கு ஏதுவாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றும் காவல்துறை ஆணையரான ஆர்.பி.ஷர்மா கூறியுள்ளார். பின்தங்கிய மாநிலமான ஒடிசாவில் பெண்களுக்கான இத்தகைய சிறப்பான திட்டங்களை மேற்கொள்வது மிகவும் பாராட்டத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி