சீனாவில் வடக்கே உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் கஷ்கர் நகரில் இருந்து அரேபிய கடலில் உள்ள குவாடர் துறைமுகத்தை இணைக்கும் வகையில் இந்த ரெயில்வே பாதை அமைய இருக்கிறது. இதற்கான தொடக்க ஆய்வுக்கு சீனா நிதி ஒதிக்கியுள்ளது என்று சீனாவில் இருந்து வெளிவரும் பத்திரிகையில் செய்தி தெரிவித்துள்ளது.
1800 கி.மீ. தூரம் உள்ள இந்த ரெயில் சேவையை மேலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கலான சுற்றுக்சூழல் மற்றும் புவியமைப்பு காரணமாக இதற்கான செலவு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருந்தாலும் இதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக ஜின்ஜியாங் மண்டல வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு ஆணையத் தலைவர் ஷாங் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி