செய்திகள்,திரையுலகம் சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…

சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…

சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-2011ல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் தெய்வத்திருமகள். வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்த அப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கிக்கொடுத்தது.அதற்கடுத்தும் விஜய் இயக்கத்தில் தாண்டவம் என்ற படத்தில் நடித்தார். கண் பார்வை இல்லாத ஒருவன் பழி வாங்கும் கதை. ஆனால் அந்த கதை எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதையடுத்து, அவர் நடித்த கரிகாலன் படமும் ஆரம்பத்திலேயே சிலபல பிரச்னைகள் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அதன் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போது இறுதிகட்டத்தில் நிற்கிறது. ஆக, கடைசியாக நடித்த 3 படங்கள் தோல்வி என்பதோடு, நடித்து வரும் படமும் வெளியாகாமல் இழுத்தடித்துக்கொண்டே இருப்பதால், விக்ரமின் ரசிகர்கள் சோர்ந்து போய் இருக்கிறார்களாம்.

அதனால், இனிமேல் வருடத்துக்கு ஒரு படம் எப்படியேனும் கொடுத்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கும் விக்ரம், தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தை வேகமாக முடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கி விட்டனர். அதனால் இன்னும் ஓரிரு மாதத்தோடு படப்பிடிபபு முடிந்து விடும்.வருகிற பொங்கலுக்கு கண்டிப்பாக அப்படம் திரைக்கு வந்து விடுமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி