அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஈராக் போராளிகளால் சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள்…!

ஈராக் போராளிகளால் சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள்…!

ஈராக் போராளிகளால் சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள்…! post thumbnail image
புதுடெல்லி :- ஈராக் நாட்டில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரில் 200–க் கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஈராக் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரில் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகள் சிக்கியுள்ளனர். நர்சுகள் பத்திரமாக உள்ள நிலையில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை.

அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை கூட இதுவரை ஈராக் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. 39 இந்தியர்களை மீட்க அமெரிக்கா, அரேபியா, ரஷியா உள்பட பல நாடுகளின் உதவியை இந்தியா நாடியுள்ளது.

இந்த நிலையில் ஈராக்கில் மேலும் 231 இந்திய வாலிபர்கள் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்பலா நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தின் வேலை பார்த்து வந்த அவர்கள், அந்த நிறுவன வளாகத்துக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கட்டுமான நிறுவன உரிமையாளர் தலைமறைவாகி விட்ட நிலையில் அந்த நிறுவனத்தை ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் கைப்பற்றியுள்ளது. அந்த கும்பல், 231 இந்தியர்களையும் விடுவிக்க மறுத்து வருகிறது.

சிறை பிடிக்கப்பட்டுள்ள 231 இந்தியர்களில் மன்பிரீத் சிங் என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:–

எங்களை அழைத்து வந்த நிறுவனம் கடந்த 2 மாதமாக எங்களுக்கு சம்பளம் தரவில்லை. எங்களை வெளியேறவும் அனுமதிக்கவில்லை.
இப்போது ஆயுதம் ஏந்திய சிலர் எங்களை இங்கு அடைத்து வைத்துள்ளனர். 2 நாட்களுக்கு ஒரு தடவை கொஞ்சம் சோறும், பேரீச்சம் பழமும் தருகிறார்கள். மற்ற நேரங்களில் பட்டினியால் தவித்து வருகிறோம். எங்களை பிடித்து வைத்திருப்பவர்கள் தீவிரவாதிகளா? அல்லது வேறு யாருமா? என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 231 இந்தியர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ள கர்பலா நகரம் ஷியா முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி