அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு எல்லா தரப்பும் ஆடியன்சும் கிடைச்சிருக்குறது சந்தோஷமா இருக்கு. இளம் பெண்கள் என்னை ஒரு அண்ணனா பார்க்குறாங்க. இளைஞர்கள் தங்களில் ஒருத்தரா பார்க்குறாங்க. தாய்மார்கள் மகனா பார்க்குறாங்க. குழந்தைங்களுக்கு என்னை எப்படி புடிக்குதுன்னே புரியல. எப்படியோ எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். அவுங்க மனசை புரிஞ்சிக்கிட்டேன்.
மான் கராத்தே படத்துல வில்லன் கால்ல விழுந்து அழும் சீன்ல ஏன் நடிச்சீங்கன்ன உரிமையோட கேட்குறாங்க. இனி அப்படி நடக்காம பார்த்துப்பேன். லிப் லாக் முத்தக்காட்சிகள்ல நடிக்கவே மாட்டேன், என் படங்கள் குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்கிறார் சிவகார்த்திகேயன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி