சென்னை:-அஜீத் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார். படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது கேமராவை எடுத்துச் செல்கிறார். சுற்றுலா இடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆர்வத்தோடு படம் எடுக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கும் வெளிப்புற படப்பிடிப்புகளுக்கும் செல்லும் போது அங்குள்ள வித்தியாசமான இடங்களை படமாக்க தவறுவதுஇல்லை. சக நடிகர் நடிகைகளை அப்பகுதியில் நிறுத்தியும் படம் எடுத்து கொடுக்கிறார்.
தற்போது நிபுணர்களை வைத்து போட்டோ கிராபி பற்றி கற்று வருகிறார். புகைப்பட தொழிலில் உள்ள நவீன தொழில்நுட்ப நுணுக்கங்கள் பற்றியும் கேட்டு அறிகிறார். அத்துடன் வீட்டிலும் நவீன கேமரா சாதனங்கள் வாங்கி குவித்து மினி ஸ்டூடியோ உருவாக்கியுள்ளார்.வெளிச்சம் எப்படி இருக்க வேண்டும் ‘லென்ஸ்’ எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் கேட்டு அறிந்து புகைப்பட பயிற்சி எடுத்து வருகிறார். படப்பிடிப்புக்கு வரும் ஸ்டில் போட்டோ கிராபர்களிடமும் இதுபற்றி கேட்டு தெரிந்து கொள்கிறார். இன்டர்நெட்டில் புகைப்படக் கலையின் புது நுட்பங்களை பற்றி அறிந்து கொள்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி