இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியதையடுத்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் களஞ்சியம் புகார் அளித்தார். இதையடுத்து களஞ்சியம் படத்தில் நடிக்காமல் வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்று அஞ்சலிக்கு சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கில்டு சங்கம் சார்பில் மற்ற மொழி பட சங்கங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
அதில் தமிழ் படத்தில் நடித்து முடிக்கும்வரை பிறமொழியில் நடிக்க அவரை அனுமதிக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது. விஷயம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் அஞ்சலியோ எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் உள்ளார். சமீபத்தில் தனது நண்பர்களுடன் நடந்த நள்ளிரவு விருந்தில் பங்கேற்று அவர்களுடன் குத்தாட்டம் போட்டார். இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி