அதே போட்டி இப்போது தாத்தா வேடம் ரூபத்தில் மீண்டும் அவர்களை தொடர்ந்திருக்கிறது. சமீபத்தில்தான் விமல் நடித்த மஞ்சப்பை படத்தில் தாத்தாவாக நடித்து பேசப்பட்டு வருகிறார் ராஜ்கிரண். அவரைத் தொடர்ந்து நாசர் தாத்தாவாக நடித்துள்ள சைவம் படமும் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட தாத்தா – பேத்திக்கிடையிலான பாச உணர்வுகளை சொல்லும் படம் என்பதால் நாசரும் தனது கேரக்டர் பேசப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.அதோடு, ராஜ்கிரணின் நடிப்பை விட உங்கள் நடிப்புதான் பேசப்படும் என்று சைவம் டீமை சேர்ந்த சிலர் நாசரை உற்சாகப்படுத்தி விட்டு வருகிறர்களாம்.
அதனால், அடுத்தபடியாக தாத்தா வேடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து யாராவது இயக்குனர்கள் ஸ்கிரிப்ட் பண்ணும் சேதியறிந்தால், அவர்களை தானே தொடர்பு கொண்டு, 80 வயது தாத்தா வேடமாக இருந்தாலும் சொல்லுங்க சும்மா ஜமாயத்திடுவோம் என்று முன்கூட்டியே தனது பெயரை பதிவு செய்து வருகிறாராம் நாசர்.இதேபோல், ராஜ்கிரணும், மஞ்சப்பை தன்னை பேச வைத்திருப்பதால், இதே வேகத்தில் தாத்தா வேடம் அல்லது அதற்கு இணையான முதிர்ச்சியான வேடங்களில் நடித்து இந்த இடத்தை ஸ்ட்ராங்காக பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும் தீவிரமடைந்திருக்கிறார். ஆக ராஜ்கிரண்-நாசருக்கிடையே திரைக்குப்பின்னால் ஒரு பெரிய போட்டியே சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி