செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய்யின் பெயர் கதிரேசன், ஜீவானந்தம்!…

‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய்யின் பெயர் கதிரேசன், ஜீவானந்தம்!…

‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய்யின் பெயர் கதிரேசன், ஜீவானந்தம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்க்கு தனது ‘துப்பாக்கி’ படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தவர் இயக்குனர் முருகதாஸ்.நூறு கோடி வசூலை அள்ளியது துப்பாக்கி. நடிப்பிலும் விஜய்க்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது. ‘துப்பாக்கி’ தந்த அதே உற்சாகத்தோடு, விஜய் மீண்டும் தற்போது முருகதாஸ் இயக்கத்திலேயே நடித்து வருகிறார்.

அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஆனால் இந்தச் செய்தி இதுவரை உறுதிப்படுத்தபடாமல் இருந்தது.தற்போது கத்தி படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கத்தி படம் குறித்து முதன் முறையாக பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த ஏ.ஆர். முருகதாஸே இதனை தெரிவித்திருக்கிறார். அதில் ‘கத்தி’ படத்தில் விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள் என்றும் ஒருத்தர் கதிரேசன், இன்னொருத்தர் ஜீவானந்தம் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் விஜய் இதில் அப்பா – மகன் கிடையாது. படத்தின் கதை சென்னையில தொடங்கி சென்னையிலேயே முடிவதை போல் அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படமும் கேங்ஸ்டர் பத்தின கதை கிடையாது என இவ்வாறு முருதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி