செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து:அமெரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி!…

உலக கோப்பை கால்பந்து:அமெரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி!…

உலக கோப்பை கால்பந்து:அமெரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி!… post thumbnail image
ரெசிப்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியும் அமெரிக்க அணியும் மோதின. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைத்தது. க்ரூஸ் அடித்த கார்னர் ஷாட்டை அமெரிக்காவின் ஜான்சன் கோல் போடாதவாறு தடுத்தார்.11வது நிமிடத்தில் ஹொவேடேசுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. 20வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் முல்லர் கோலை நோக்கி அடித்த பந்தை ஹோவார்டு சாமர்த்தியமாக செயல்பட்டு தடுத்தார்.

31வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் க்ரூஸ் அடித்த பந்தை மீண்டும் லாவகமாக தடுத்தார் ஹோவார்டு. 37வது நிமிடத்தில் அமெரிக்காவின் கோன்சாலெசுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. முதல் பாதி ஆட்டத்தில் 60 சதவிகித நேரம் பந்து ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் கிடந்தது. இருந்தபோதும் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறின.பின்னர் சிறிது நேர இடைவெளிக்கு பின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. 47வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஸ்கீவின்ஸ்டர் அடித்த பந்தை அமெரிக்காவின் பியாஸ்லி அற்புதமாக பாய்ந்து தடுத்தார்.

ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் முல்லர் அற்புதமான கோல் ஒன்றை அடித்தார். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி முன்னிலை வகித்தது. 62வது நிமிடத்தில் அமெரிக்காவின் பெக்கர்மேனுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.90வது நிமிடத்தில் அமெரிக்காவின் பெடோயா அடித்த பந்தை ஜெர்மனியின் லேம் லாவகமாக பாய்ந்து தடுத்தார். இறுதியில் கோல் எதுவும் அடிக்காத அமெரிக்க அணியை வீழ்த்தி ஜெர்மனி ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக ஜெர்மனியின் முல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி