அந்தக் காரில் நந்தாவும், அனன்யாவும் சென்று கொண்டிருக்கும்போது வில்லனாக நுழையும் நிகேஷ்ராம் துப்பாக்கி முனையில் அவர்களை கடத்துகிறார். அது மட்டுமின்றி வீட்டிலிருக்கும் அவர்களது குழந்தையும் கடத்தப்படுகிறது. தன்னுடைய சொல்படி நடக்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவாதாக மிரட்டும் நிகேஷ்ராம், அவர்களை கொடுமைப்படுத்தி விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறார். அதன் உச்சக்கட்டமாக நந்தாவிடம் ஒருவரை கொலை செய்யச் சொல்லியும் மிரட்டுகிறார்.
அவர் யார்? ஏன் கொலை செய்ய சொல்கிறார்கள்?, எதற்காக அவர்களை கடத்தினார்கள்? என்பதை பரபரப்பில்லாத திரைக்கதையில் யூகிக்க முடியாத திகிலான விசயமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பரதன்.
தன் மனைவியிடம் அத்து மீறும் நிகேஷ்ராமை ஒன்றும் செய்ய முடியாமல் தனது இயலாமையால் அமைதியாக கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி மற்றும் குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து கோபம் கொள்ளும் காட்சி என காட்சிகளுக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நந்தா. அனன்யா காதல் காட்சிகளிலும், குழந்தையின் அம்மாவாகவும் காட்சிகளுக்கேற்ற மாதிரியான சரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தப்பிக்க முயற்சி செய்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் காட்சி நகம் கடிக்க வைக்கும் திகில் காட்சி. அது தோல்வியில் முடியும்போது, ‘அய்யோ பாவம்’ என பரிதாபம் ஏற்படுகிறது. நந்தா கண் முன்னால், தப்பிக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அசால்டாக முறியடிக்கும் காட்சிகள் பிரமாதம்!
இன்றைய சமூகத்தில் நடந்து வரும் ஒரு முறையற்ற செயலால் பல குடும்பங்கள் எப்படி சீரழிகிறது என்ற கருத்தை மையமாகக் கொண்டு கடைசி வரை யூகிக்க முடியாத படத்தின் முடிவைக் கொடுத்த இயக்குனர் பரதனை பாராட்டலாம்.புதுவரவு வில்லன் நிகேஷ்ராம் அவருக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். மேலும் அமைதியான வில்லத்தனம் செய்துள்ளார். இளைஞர்களை சூடேற்ற ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார் ரக்ஷனா மௌரியா.திரைக்கதையின் பெரிய பலமாக விளங்குவது யூகிக்க முடியாத க்ளைமேக்ஸ் தான்… ஜெய்யின் ஒளிப்பதிவு மற்றும் பரத்வாஜின் பின்னணி இசை காட்சிகளுக்கு மேலும் பலம்.
ஆக மொத்தத்தில் “அதிதி” இன்றைய சமுதாயத்தை பாதித்து வரும் முறையற்ற செயலுக்கு தீர்வு காண வேண்டிய படமாக….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி