எனினும் விமான தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச விசாரணையம் நடைபெற்று வருகிறது.விசாரணை அதிகாரிகள் விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவல்கள் மற்றும் செயற்கைக்கோள் மூலம் கிடைத்த தகவல்களை கொண்டு விசாரித்து வருகின்றனர். தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் தேவையில்லாமல் எரிபொருள் காலியாகும் வரையில் ‘ஆட்டோ-பைலட் மோடில்’ வைத்து ஓட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் நம்புகின்றனர் என்று ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியக தலைமை ஆணையர் மார்ட்டின் டோலன் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் பறந்த போது எரிபொருள் காலியாகும் வரையில் விமானம் ‘ஆட்டோ-பைலட் மோடில்’ வைத்து ஓட்டப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.மேலும், விமானம் ‘ஆட்டோ-பைலட் மோடில்’ பறக்க அப்போதுதான் இயக்கப்பட்டுள்ளதா இல்லை முன்கூட்டியே விமானத்தை ‘ஆட்டோ-பைலட் மோடில்’ இயக்க செட்டிங் எதுவும் செய்யப்பட்டிருந்ததா என்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்துள்ள டோலன், யூகத்தின்படி விமானம் வானில் பறக்கும்போதுதான் ‘ஆட்டோ-பைலட் மோடில்’ பயணம் செய்ய இயக்கப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி