இந்தித் திரையுலகைப் பொறுத்தவரை 100 கோடி ரூபாய் மேல் வசூலிக்கும் படங்கள் ‘100 கோடி ரூபாய் கிளப்’ என பெருமையாக அழைப்பது வழக்கம். அந்த விதத்தில் இந்த ஆண்டில் சல்மான் கான் நடித்த ‘ஜெய் ஹோ’ இதுவரை 109 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூலை இந்த வார இறுதிக்குள் ‘ஹாலிடே’ திரைப்படம் பெற்றுவிடும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இதற்கு முன் ஆமிர் கான் நடித்து வெளிவந்த ‘கஜினி’ படமும் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனது இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளதால் முருகதாஸ் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். அந்த வெற்றிப் பெருமிதத்துடன் விஜய், சமந்தா நடிப்பில் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் ‘கத்தி‘ படத்தையும் மாபெரும் வெற்றிப் படமாக்க முயன்று வருகிறாராம். இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க அக்ஷய் குமார் விருப்பத்தை தெரிவித்துள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி