இது பற்றி வித்யாபாலன் கூறியதாவது, என் அப்பா எனக்கு எப்பவுமே ஆதரவாக இருப்பார். இதைச் செய், அதைச் செய் என்று சொல்லவே மாட்டார். ஆனால், என் அம்மா அப்படியில்லை. நான் நடிக்க வந்தது என் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. திரையுலகத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என அவர் ஆரம்பித்தில் பயந்தார். மற்றவர்களைப் போலவே திரையுலகம் மிகவும் மோசமான ஒரு உலகம் என்ற கருத்தையே கொண்டிருந்தார். படிப்பில் கவனம் செலுத்தி , ஏதாவது ஒரு அலுவலகத்தில் நான் வேலை பார்க்க வேண்டும் என்றே விரும்பினார். இதனால் எங்களுக்குள் சண்டை எல்லாம் நடந்தது.
ஆரம்ப நாட்களில் படப்பிடிப்பிற்கு எனக்கு துணையாக வருவார். நான் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எனக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என நினைப்பார். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக பாதுகாப்பு என்பது அவரவர் கையில் உள்ளது என்பதை உணர்ந்தார். நாம் மற்றவர்களிடம் எப்படி பழகுகிறோம் என்பதைப் பொறுத்தே அது அமைகிறது. போகப் போக எனக்கான பாதுகாப்பை நான் பார்த்துக் கொள்ள முடியும் என்று உணர்ந்தார்.நானும் சினிமாவில் நடிப்பதற்காக என் அம்மாவை சம்மதிக்க வைக்க பெரும்பாடுபட்டேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி