நடிகர் ஷாருக்கானின் வீட்டில் வேலை வாங்கி தருவதாக சிறுமியை ஏமாற்றி நாலாசோப்ரா ரெயில் நிலையத்தில் வைத்து சிறுமியை ஷாருக்கானின் டிரைவர் பிந்து மிஸ்ரா கற்பழித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி லாதூரில் இருந்து மும்பை வந்து நடிகையின் வீட்டில் வேலை பார்த்துள்ளார். அவரிடம் மிஸ்ரா நண்பராக பழகியுள்ளார். பின்னர் இருவரும் நெருங்கிய நண்பராக பழகியுள்ளனர். இதற்கிடையே நடிகையின் வீட்டில் இருந்து வேலையை விட்டுவிட்டு வெளியேவர சிறுமியை பிந்து மிஸ்ரா வற்புறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் 20ம் தேதி சிறுமியை பிந்து மிஸ்ரா கற்பழித்துள்ளான். மேலும், இது குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று மிராட்டியுள்ளான். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பாந்த்ரா காவல்நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வரும் போலீசார் மிஸ்ராவை கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி