செய்திகள்,திரையுலகம் சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!…

சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!…

சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!… post thumbnail image
சென்னை:-சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்ற சிங்கள படம் வித் யூ வித் அவுட் யூ. சிங்கள ராணுவத்தில் பணி புரிந்த ஒருவன் பின் ராணுவத்தில் இருந்து வெளியேறி, ஒரு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். ஆனால், அவன் ராணுவத்தில் இருந்தது பின்னர்தான் அந்த பெண்ணுக்கு தெரிய வருகிறது.

அதோடு தமிழ்ப்பெண்களை பாலியல் கொடுமை செய்து கொன்றவர்களுக்கு அவன் உடந்தையாக இருந்ததும் அவளுக்கு தெரியவர, தற்கொலை செய்து கொள்வது போல் அப்படத்தின் கதை உள்ளதாம்.சிங்கள மொழியில் உருவான அப்படத்தை தமிழில் டப் செய்து சென்னையில் இரண்டு தியேட்டர்களில் கடந்த 20ம் தேதி முதல் திரையிட இருந்தனர். ஆனால் இந்த படத்தை திரையிடக்கூடாது என்று சில தமிழ் அமைப்புகள் தியேட்டர் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதோடு, மீறினால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதனால் குறித்த நாளில் அப்படம் திரையிடப்படவில்லை.

ஆனால், அப்படத்தின் இணை தயாரிப்பாளரான ராகுல் ராய், எப்படியும் வித் யூ வித் அவுட் யூ படத்தை தமிழகத்தில் வெளியிட வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்காரணமாக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இது சம்பந்தமாக ஒரு கடிதம் எழுதியுள்ளாராம். அதில், இப்படம் இலங்கை போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமையைத்தான் சொல்கிறது. அங்கு நடந்த போர்க்குற்றங்களை வெளிச்சம் போட்டிருக்கிறோம். அதனால் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி