இந்த படத்தை சென்னையில் வெளியிட தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் படத்தை தமிழகத்தில் வெளியிட தமிழக அரசிடம் அப்பட இயக்குனரான பிரசன்ன விதானகே மற்றும் அப்பட தயாரிப்பாளரும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழ் உணர்வாளர்களுக்கு அப்படத்தை போட்டு காண்பித்தனர். ஆனால் படத்தில் பல இடங்களில் தமிழர்களை பயங்கரவாதிகள் என்பது போன்று காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழ் உணர்வாளர்கள் ஆவேசமாகினர். இதையடுத்து, அப்படத்தின் டைரக்டருடன் வந்திருந்த ஆடுகளம் ஜெயபாலன், அப்படத்தையும், அதன் டைரக்டரையும் பாராட்டி மேடையில் பேசினார்.
பின்னர் வந்திருந்த மீடியாவினர் சார்பில் டைரக்டர் பிரசன்னா விதானகேயிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அரங்கத்தில் இருந்த இயக்குனர் வ.கெளதமன், இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஒரு இயக்குனராக, சிங்களக்காரராக, மனித நேயத்துடன் சரியான பதிலை சொல்லுங்கள்? என்று கேள்வி கேட்டார். அதற்கு அவர் சரியான பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.அதைப்பார்த்த ஜெயபாலன், அவர் சார்பில் பதில் கொடுத்தார். அதற்கு தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஜெயபாலனின் மனைவியும் கடுமையான வார்த்தைகளால் சாடினார். இதனால் தமிழ் உணர்வாளர்கள் கொந்தளித்ததோடு, அடி உதையில் இறங்கி விட்டனர். இதையடுத்து போலீசார் வந்து ஜெயபாலனுக்கு பாதுகாப்பு கொடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி