மேலும், கோச்சடையான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என்பதால், இந்த லிங்கா அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து வரும் ரஜினி, தனது பழைய வெற்றி செண்டிமென்ட்டுகளையும் இந்த படத்தில் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.
ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் நல்ல கதைதான் அவசியம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஏற்கனவே வெற்றியை கொடுத்த படங்களில் தான் கடைபிடித்தவற்றை தொடர்வது சினிமா உலகின் பாலிஸி என்பதால், தான் நடித்ததில் ரயில் சண்டை காட்சிகள் இடம்பெற்ற படங்கள் அனைத்துமே ஹிட்டடித்திருக்கின்றன என்பதால், இந்த படத்திலும் கட்டாயம் ஒரு ரயில் சண்டை காட்சி வேண்டும் என்று செண்டிமென்டுக்காக கதைக்குள் புகுத்தியிருக்கிறாராம் ரஜினி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி