சென்னை:-நடிகை கார்த்திகா இப்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடித்து வரும் புறம்போக்கு படத்தில் ஒரு ஆக்சன் ரோலில் நடிக்கிறார். ஒரு காட்சியில் அவரை ஒட்டகம் ஓட்டுவது போல் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னாராம். அதற்கு உடனே தயாராகிவிட்ட கார்த்திகா பயற்சியில் ஈடுபட்டவர் ஒரு சில மணி நேரத்திலேயே பயிற்சி எடுத்து விட்டவர்.
பாலைவன பிரதேசத்தில் படமாக்கப்பட்ட அந்த காட்சியிலும் அன்றைய தினமே நடித்துக்கொடுத்தாராம். அதைப்பார்த்து டோட்டல் யூனிட்டே கார்த்திகாவை கைதட்டி உற்சாகப்படுத்தினார்களாம். அதையடுத்து, இதுவரை ஒட்டகத்தை தூரத்தில் நின்றுதான் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அதன் அருகே சென்றபோது பயமாகத்தான் இருந்தது. ஆனபோதும், அதை வளர்ப்பவர், அதனிடம் நான் எப்படி எப்படி பழக வேண்டும் என்பதை முறையாக கற்றுக்கொடுத்தார். அந்த ஒட்டகமும் வீட்டில் வளர்க்கப்பட்டது என்பதால், அதுவும் எளிதாக என் சொல்லுக்குள் கட்டுப்பட்டது என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டாராம் கார்த்திகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி