பொதுவாக பிரபலமானவர்களின் டுவிட்டர் செய்திகளை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த வகையில் உலக தலைவர்களின் டுவிட்டர் ரசிகர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி 6வது இடத்தில் இருந்தார். கடந்த வாரம் அவர் 5வது இடத்துக்கு முன்னேறினார். இவருக்கு அடுத்த இடத்தில் துருக்கி அதிபர் அப்துல்லா குல் இருந்தார். அந்த சமயத்தில், அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் டுவிட்டர் பக்கம் 4வது இடத்தில் இருந்தது. நேற்றைய கணக்குபடி 49 லட்சம் ரசிகர்களுடன் மோடி 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, 4 ஆயிரம் ரசிகர்கள் குறைவாக பெற்று 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், அமெரிக்க அதிபர் ஒபாமாவையே டுவிட்டரில் தற்போது 4 கோடி 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவருக்கு அடுத்து 2வது இடத்தில் போப் ஆண்டவரின் 9 மொழிகளில் உள்ள டுவிட்டர் பக்கங்களை 1 கோடி 40 லட்சம் பேர் கவனிக்கிறார்கள். 3வது இடத்தில் இந்தோனேயாவின் அதிபர் சுசிலோ பாம்பாங் யுதயோனா 50 லட்சம் ரசிகர்களை கொண்டுள்ளார். தற்போது 4வது இடத்துக்கு மோடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி