சென்னை:-நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘அமரகாவியம்’. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
1980களில் நடக்கும் காதலை சித்தரிக்கும் அழகான காதல் காவியமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோவை வருகிற ஜூன் 28ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆடியோவை நயன்தாரா வெளியிட திரிஷா அதை பெற்றுக்கொள்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி