செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு வாடிகனில் போப் உருவாக்கிய கிரிக்கெட் அணி!…

வாடிகனில் போப் உருவாக்கிய கிரிக்கெட் அணி!…

வாடிகனில் போப் உருவாக்கிய கிரிக்கெட் அணி!… post thumbnail image
வாடிகன் சிட்டி:-போப் பிரான்சிஸ் உருவாக்கியுள்ள முதல் கிரிக்கெட் அணி வாடிகனில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ் கிளப் என்று அழைக்கப்படும் இந்த அணியில் எட்டு இந்தியர்கள், இரண்டு இலங்கை நாட்டவர், ஒரு பாகிஸ்தானியர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி குர்ரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாடிகனின் கிரிக்கெட் அணியில் இந்தியர்களின் ஆதிக்கம் இருப்பது குறித்து கேட்கப்பட்டபோது இந்தியர்கள் இந்த விளையாட்டில் சிறந்தவர்களாக இருக்கின்றனர் என்று மதகுருமார்கள் கலாச்சார சபையின் தலைவர் மெல்சோர் சன்செஸ் டி டோகா தெரிவித்தார்.இந்த அணியில் இடம் பெற்றிருப்பவர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஊழியர்களும், பாதிரியார்களும், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களும் ஆவர் என்று அவர் கூறினார். இவர்கள் அணியின் மானேஜராக அறிவிக்கப்பட்டுள்ள எம்மோன் ஓ’ஹிக்கின்ஸ் இந்த வீரர்கள் பாதிரியார்களுக்கான பயிற்சிகளில் ஈடுபடுவதையே தங்களின் முதல்செயலாக மேற்கொள்ளுவர். இதுதவிர ஒய்வு நேரங்களில் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவர் என்றும் தெரிவித்தார்.

இவர்களுக்குத் தேவையான மேல்கோட்டு உட்பட அனைத்து விளையாட்டு உபகரணங்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளது. தங்களின் பயிற்சி ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெற்றுள்ள இந்த அணியினர் விரைவில் தங்களது முதல் வெளிநாட்டு போட்டியை விளையாட உள்ளனர்.அதற்கு முன்னால் போப்பாண்டவரை சந்திக்கவேண்டும் என்று இவர்கள் எண்ணுகின்றனர்.அனைத்து மதத்தினருடனும் கிரிக்கெட் ஆடவேண்டும் என்ற குறிக்கோள் இவர்களிடத்தில் உள்ளது.வாடிகனில் கால்பந்து ரசிகர்களே அதிக அளவில் உள்ளதால் தாங்கள் விளையாடும் கிரிக்கெட்டை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே வீரர்களின் முக்கிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பிற நாட்டினருடன் இவர்கள் ஆடும் போட்டிகளின் நுழைவு இலவசமாக இருக்கும் என்றபோதிலும் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு அந்தத் தொகை ரோமன் கத்தோலிக்க சபை மற்றும் ஆங்கிலிகன் சபை இணைந்து கடத்தலுக்கு எதிராக எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும்.தங்களுக்கு தகுந்த ஸ்பான்சர்கள் கிடைப்பார்களேயானால் இந்தியாவிற்கும் தாங்கள் வரக்கூடும் என்ற நம்பிக்கையை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி