விழாவில் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா பேசும்போது, நீண்ட நாள் கழித்து கார்த்தி தனது பாணியில் இருந்து விலகி ஒரு உணர்வுப்பூர்மான கதையில் நடிக்கிறான். இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் ‘ஸ்டுடியோ கிரீனு’க்கு வந்தபோது யார், யாரெல்லாம் இந்தப் படத்துல நடிக்கலாம் என பேச்சு வார்த்தைகளெல்லாம் போய் கொண்டிருந்தது. ஆனால் இதை படித்த கார்த்தி நானே பண்றேனே என உள்ளே நுழைந்துவிட்டான். பருத்தி வீரனை தொடர்ந்து நிச்சயம் அவனது கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்றார்.
விழாவில் கார்த்தி பேசும்போது, வடசென்னை பகுதி மக்களின் உண்மையான வாழ்க்கையை அப்படியே இந்தப் படம் பிரதிபலிக்கும். தமிழ்ச் சினிமாவுலேயும் ஒரு முக்கியமான படமாவும் இது இருக்கும். முதல் நாள் படப்பிடிப்பு நள்ளிரவு 2 மணிக்கு ஆரம்பிஞ்சாங்க. படப்பிடிப்பு வந்ததும் என்கிட்ட ஒரு பிளாஸ்டிக் குடத்தை கொடுத்து குழாயில் தண்ணியடிச்சிட்டு வாங்கன்னு சொன்னாங்க. ஆனால், அங்க ஏற்கெனவே நிறைய பெண்கள் வரிசையில் நின்றார்கள்.அவங்கிட்ட வம்பிழுத்து எப்படியோ தண்ணியடிச்சிட்டு வரணும். இதுதான் முதல் சீன். இந்த மாதிரி என் வாழ்க்கையில் எனக்கு கிடைக்காத புதுமையான அனுபவங்களெல்லாம் இந்தப் படத்தோட முதல் நாள்ல இருந்தே கிடைத்தது. மேலும் இதில் எனக்கு ஒரு நீளமான டயலாக் கொடுத்தனர் அதை நான் பத்து முறைக்கு முயற்சி செய்தும் முடியவில்லை. இறுதியில் வீட்டுக்கு சென்று விட்டேன். அடுத்த நாள் வந்து அந்த டயலாக்கை ஒரே டேக்கில் முடித்தேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி