எந்திரம் 2–ம் பாகம் படத்திலும் ரஜினியே நடிக்க வேண்டும் என்பது ஷங்கரின் ஆசை. இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது எந்திரன் 2–ம் பாகத்தில் நடிக்கும்படி ரஜினியிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் நடிப்பது குறித்து தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் ரஜினி கருத்து கேட்டதாகவும் அவர்கள் நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உடம்பை வருத்தி படங்களில் நடிக்கக்கூடாது என்று ரஜினியை அவர்கள் எச்சரித்துள்ளனர். எந்திரன் 2–ம் பாகம் படத்தில் உடம்பை வருத்துவது போல் நிறைய காட்சிகள் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இதையடுத்து இந்த படத்தில் ரஜினி நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதில் அஜீத்தை நடிக்க வைக்கலாமா என ஷங்கர் யோசிக்கிறாராம். வேறு சில நடிகர்களும் பரிசீலனையில் உள்ளனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி