இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அதில் 5 பேர் என்னை கற்பழித்தனர். அதனை மற்றவர்கள் வீடியோ எடுத்தனர் என்று கூறியுள்ளார். பாஸ்தாடா கிராமத்தில் இருந்து இளம்பெண்ணை கடத்திவந்து அந்த கும்பல் கற்பழித்துள்ளது. இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளது. பயத்தினால் பாதிக்கப்பட்ட பெண் அப்போது போலீசில் புகார் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் குற்றவாளிகள் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.பெண்ணை கற்பழித்த வாலிபர்கள், ராஷித், வாஷிக், அப்துல் ரகுமான், சோகான், அபுல், மொனு, ராகுல், சாலு என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாலிபர்களுக்கு எதிராக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் ராஷித், வாஷிக், அப்துல் ரகுமான், சோகான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி