செய்திகள்,திரையுலகம் ராஜா வேடத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…

ராஜா வேடத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…

ராஜா வேடத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘கத்தி’ படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய். குறிப்பாக இப்படத்தில் அவரது வில்லன் நடிப்பை யூனிட்டே கைதட்டி ஆரவாரம் செய்து வருகிறார்களாம்.கத்தியைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படத்திலும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.

சிம்புதேவன் படத்தில் அப்பா-மகன் என்ற இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். அதனால் அப்பா கெட்டப்பில் 50 வயது கொண்டவராக நடிக்கும் விஜய், அதற்காக உடல் எடையை அதிகப்படுத்துகிறாராம்.மேலும், தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய மகதீரா படம் போன்று ராஜவம்ச கதையில் இப்படம் தயாராகிறதாம். அதோடு இரண்டு ஜென்ம கதைகளும் சொல்லப்படுவதால், நடுத்தர வயது கொண்ட விஜய்க்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறாராம்.

அதேபோல் முக்கிய ஹீரோவான இளவட்ட விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருவரும் நடிக்கிறார்களாம்.குறிப்பாக, நடுத்தர வயது கெண்ட கெட்டப்பில் நடிக்கும் விஜய் ராஜா கெட்டப்பில் நடிக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி