சமீபகாலமாகவும் தனது இமேஜை பாதிக்காத சிறிய கேரக்டர்களிலும் நடித்து வரும் சுகாசினி, தற்போது ஞானராஜசேகரன் இயக்கியுள்ள ராமானுஜன் படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த ரோல், கதையை நகர்த்தி செல்லும் முக்கிய கேரக்டராம். பாசிட்டீவ் மட்டுமின்றி சில இடங்களில் வில்லித்தனத்தையும் இந்த கேரக்டர் வெளிப்படுத்துமாறு அமைக்கப்பட்டுள்ளதாம்.இதுபற்றி சுகாசினி கூறுகையில், நான் சினிமாவில் நடித்ததில் ஒரு பத்து படங்களை முக்கிய படங்களாக குறிப்பிடுவேன் அதில், நெஞ்சத்தை கிள்ளாதே, பாலைவனச்சோலை, குடும்பம் ஒரு கதம்பம், கோபுரங்கள் சாய்வதில்லை, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்கள் அடங்கும்.
ஆனால், இப்போது ராமானுஜன் படத்தில் நடித்தபிறகு நான் நடித்ததில் முதல் முக்கிய 5 படங்களில இந்த படமும் குறிப்பிடத்தக்க படமாகி விட்டது.இந்த படத்துக்காக 120 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு பெண்கள் அணிந்த பதினாறு முழம் புடவையைக்கட்டிக் கொண்டு நடித்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது எனறாலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும என்பதற்காக பக்காவாக என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன். அதிலும் கணிதமேதை ராமானுஜரின் அம்மாவாக நடிக்கக் கிடைத்ததை என் திரையுலக வாழ்க்கையில் பெருமையாக கருதுகிறேன் என்கிறார் சுகாசினி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி