சென்னை:-சினிமாவில் மட்டுமின்றி, சினிமா விழாக்களிலும் காமெடி பண்ணிக்கொண்டிருந்த ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் தற்போது டுவிட்டரிலும் தன் சேட்டையை ஆரம்பித்துவிட்டார். டுவிட்டரில் கணக்கு வைத்துக் கொண்டு அவ்வப்போது மொக்க விஷயங்களை எல்லாம் டுவீட் பண்ணும் சீனிவாசன் நடிகை அமலாபால் திருமணத்துக்கு இவர் செல்லவில்லையாம்.
அது தொடர்பாக ஒரு செய்தியை டுவீட் பண்ணி இருக்கிறார் பவர்ஸ்டார். அதாவது, அன்புள்ள சிஸ்டர் அமலாபால், நீங்கள் என் மேல் கடும்கோபத்தில் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை மன்னித்துவிடுங்கள், உங்கள் திருமணம் அன்று நான் ஷூட்டிங்கில் இருந்ததேன். அதனால்தான் வரமுடியவில்லை என்று டுவீட் பண்ணி இருக்கிறார் சீனிவாசன்.
இதில் வேடிக்கை என்ன வென்றால், அமலாபால் திருமணத்துக்கு பவர்ஸ்டாருக்கு அழைப்பே இல்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி