அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு மோமினுல் ஹக் களமிறங்கினார். அவரும் பெரிதாக சோபிக்காமல் 11வது ஓவரில் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதே சமயம் மறுமுனையில் அனாமுல் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். பின்னர் 4வது விக்கெட்டுக்கு முஷ்பிக்குர் ரஹிம் களமிறங்கினார். அவர் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அனாமுலும், முஷ்பிக்குரும் சேர்ந்து ரன்களை குவித்து வந்த போது ஆட்டத்தின் 23வது ஓவரில் 44 ரன்கள் குவித்து அனாமுல் அவுட்டானார்.
பின்னர் 5வது விக்கெட்டுக்கு ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். இவரும் இந்திய பந்துவீச்சை அடித்து ஆடி ரன்களை சேர்த்து வந்தார். ஆட்டத்தின் 27வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் பர்வேஸ் ரசூல் வீசியபோது முஷ்பிக்குர் அரைசதம் அடித்தார். ஆனால் ரசூல் வீசிய 31வது ஓவரில் 59 ரன்களுக்கு அவுட்டானார் முஷ்பிக்குர். பின்னர் ஆறாவது விக்கெட்டுக்கு மகமதுல்லா களமிறங்கினார். அவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஷகிப் தன்பங்குக்கு 58 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அவுட்டாக, மகமதுல்லாவும் 44 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய களமிறங்கிய நசிர் ஹுசைனும் 20 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் இறுதி ஓவர்களின் வங்கதேச அணியின் இறுதி நிலை ஆட்டக்காரர்களான மொர்டாசாவும், ரசாக்கும் தங்கள் பங்குக்கு அதிரடியாக ஆடி முறையே 10 பந்துகளில் 18, 12 பந்துகளில் 16 ரன்கள் குவித்தனர். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.273 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி தனது ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உத்தப்பாவும், ரகானேவும் களமிறங்கினர். உத்தப்பா வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியபோது, ரகானே சற்று பொறுமையாக ஆடினார். 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா ஷாகிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது ரகானே 46 ரன்களில் களத்தில் இருந்தார். புஜாரா களமிறங்கிய போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரம் கழித்து டக் வொர்த் லிவிஸ் முறைப்படி இந்தியாவிற்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 153 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி