இதன் பின்னர் இரு அணியும் விறுவிறுப்பாக மோதிய போதும் முதல் பாதியில் இரு அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. பின்னர் பின்பாதியில் ஆட்டம் சூடுபிடிக்கத்தொடங்கியது. குறிப்பாக மெஸ்ஸியின் ஆட்டத்தில் அனல்பறந்தது. பம்பரமாக களத்தில் சுற்றிய அவர் 65வது நிமிடத்தில் அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.
உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் இரண்டாவது கோல் இதுவாகும். இதற்கு முன்பு அவர் 2006ல் செர்பியா அணிக்கு எதிராக கோல் அடித்திருந்தார். பின்னர் வெற்றிக்காக கோராடிய போஸ்னியா அணியில் ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் இபிசிவிச் ஆறுதல் கோல் அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி