சென்னை:-அஜித் நடித்த ‘பில்லா 2’ படத்தில் நாயகியாக நடித்தவர் பார்வதி ஓமனக்குட்டன். ‘பில்லா 2’ பாக்ஸ் ஆபீசில் பப்படமாகிப் போனதால் பார்வதியை ஓரம்கட்டி விட்டார்கள் தமிழ்த் திரையுலகினர். அதன் பின் அவர் நடித்த மலையாளப் படமான ‘கே.கியூ’ படமும் மாபெரும் தோல்வியைச் சந்தித்தது. தமிழ், மலையாளத்தில் யாருமே கண்டு கொள்ளாமல் போனதால் எப்படியோ ஹிந்தித் திரையுலகில் நாயகியாக நுழைந்துவிட்டார்.
தமிழில் வெளிவந்த வெற்றிநடை போட்ட ‘பீட்சா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பார்வதி ஓமனக்குட்டன்தான் கதாநாயகி. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார். ‘பீட்சா’ படத்தில் படத்தின் நாயகனாக அக்ஷய் ஓபராயுடன் ஒரு முத்தக்காட்சியில் மிகவும் நெருக்கமாக நடித்திருக்கிறாராம் பார்வதி.
அது மட்டுமல்ல படத்தில் அவர் வரும் காட்சிகள் அனைத்துமே படு கிளாமராக அமைந்திருக்கிறதாம். வெறும் டிரைலரைப் பார்த்தே பலரும் மிரண்டுள்ள நிலையில் படம் வந்தால் எப்படியிருக்கும் என பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி