கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி சீன தலைநகர் பிஜிங் செல்லும் வழியில் மலேசிய விமானம் நடுவானில் காணாமல் போய்விட்டது.
இந்த விமானம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டதையடுத்து, அப்பகுதியில் தேடும் பணியில், பல நாடுகளின் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். தற்போது வரை, விமானத்தின் நிலை என்ன என்பதை, மலேசிய அரசால் அறிய இயலவில்லை.
விமானம் காணாமல் போய் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில்,விமானம் குறித்த சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு, 30 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என, பயணிகளின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் விமானம் குறித்த தகவல் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி