சென்னை:-சில வருடங்களுக்கு முன் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் ஸ்ரேயா. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் கதாநாயகியாக நடிக்குமளவுக்கு ஸ்ரேயாவின் நட்சத்திர அந்தஸ்த்து அப்போது உச்சத்தில் இருந்தது.
முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் ஸ்ரேயா உடன் ஒரு படத்திலாவது இணைந்தவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுத்து புக் பண்ணுங்கள் என்று தயாரிப்பாளர்களை நச்சரித்தனர்.நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த ஸ்ரேயா, பணத்துக்கு ஆசைப்பட்டு இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலு உடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார்.
அதன் பிறகு முன்னணி ஹீரோக்கள் எவருமே ஸ்ரேயாவை ஜோடியாக்க விரும்பவில்லை. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இதே நிலைமைதான். புதிய பட வரவுகள் ஏதும் தேடி வரவில்லை அதனால் விரைவில் ஸ்ரேயாவின் கல்யாண அறிவிப்பு வரலாம் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி