வேலையில்லா பட்டதாரி படத்தை முடித்துவிட்டு தற்போது ஹிந்திப்படத்தில் நடித்து வரும் தனுஷ், அதை முடித்த பிறகு வெற்றிமாறன் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தில் பார்த்திபன் என்ன வேடத்தில் நடிக்கிறார். வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.
பார்த்திபன் தரப்பிலோ மௌனத்தையே பதிலாக தருகிறார்கள். இதற்கிடையில் வெற்றிமாறன் இன்னும் முழு கதையையும் ரெடி பண்ணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.துண்டு துண்டாக சில காட்சிகளை மட்டும் அவ்வப்போது தனுஷிடம் சொல்கிறாராம். ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணாமல் வெற்றிமாறன் இப்படி காலம் கடுத்துவது தனுஷை எரிச்சல் அடைய வைத்திருப்பதாகவும் கேள்வி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி