இந்த படம் இதுவரை அதிகமானோர் அறிந்திராத போட்டோ ரியாலிஸ்டிக் பெர்பார்மன்ஸ் கேப்சரிங் என்ற புதிய தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அமெரிக்காவில் வெளியாகியுள்ள செய்தியில், ஹாலிவுட் திரையுலக ஸ்பெஷல் எபெக்ட்சுக்கான ஸ்டுடியோவை சேர்ந்தவர்கள் கோச்சடையான் படத்தை பார்த்துள்ளனர்.
இந்தியாவில் தயாரான படமா.என்று அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். படத்தை பார்த்து விட்டு அமெரிக்க ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி உள்ளனர்.
தென்னிந்தியாவில் 3வது வாரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த படம் 350 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது.ஜூன் இறுதியில் லண்டன் நகரில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டியூட்டில் கோச்சடையான் படத்தை திரையிட திட்டமிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் உள்ள திரைப்பட திருவிழாக்களில் பங்கேற்பதற்கு கோச்சடையான் படத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. விரைவில், ஜப்பான் நாட்டில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி